டாக்டர் க. கலைவேந்தன்

பல் மருத்துவர் & புற்றுநோய் சிகிச்சை ஆலோசகர்

வினாயகா மருத்துவமனை, புதுச்சேரி | கலை மருத்துவமனை, கடலூர்

சமூக மற்றும் மருத்துவ சேவைகள்

டாக்டர் கலைவேந்தன் அவர்கள் புதுச்சேரி மற்றும் கடலூரில் பல் மருத்துவம் மற்றும் புற்றுநோய் ஆலோசனையில் சிறப்பாக சேவை செய்து வருகிறார். புகையிலையில்லா சமுதாய இயக்கம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் புகையிலை எதிர்ப்பு குறித்த பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்புறங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்துள்ளார்.

தமிழுக்கான அர்ப்பணிப்பு

தமிழ் மொழியின் மீது ஆழ்ந்த பற்று கொண்டு அவர் “அகில உலக தமிழ்நண்பர்கள் சமூக இயக்கம்” அமைப்பை நிறுவி உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

அவர் தற்போது மத்திய அரசின் திரைப்பட தணிக்கைத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.

எழுத்துலகப் பங்களிப்பு

மனித மருத்துவம், சிகரம் தொடலாம், பயணங்கள் முடிவதில்லை, என்னுள் நான், குரு பார்வை கோடி நன்மை, பெண்மையின் பேராற்றல் ஆகிய நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்திய நூல் “உலகம் உன் காலடியில்” மாண்புமிகு அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களால் வெளியிடப்பட்டது.

சர்வதேச பங்களிப்புகள்

இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தமிழ் மற்றும் மருத்துவம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். அவரது புற்றுநோய் ஆராய்ச்சி கட்டுரைகள் உலக சுகாதார நிறுவனம் (WHO) உட்பட பல்வேறு நாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

விருதுகள்

வரவிருக்கும் நிகழ்வுகள்

அனைத்து நிகழ்வுகளும் இரவு 8:30 மணிக்கு தமிழமுது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும்.

முடிவுரை

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாகவும் தமிழை நெற்றிக்கண்ணாகவும் கொண்டு சமூகத்திற்கும் தமிழுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் டாக்டர் க. கலைவேந்தன் அவர்கள், விவேகானந்தரின் கனவை நனவாக்கும் வழியில் இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

கேலரி

🌸 அகிலஉலக தமிழ்நண்பர்கள் சமூக இயக்கம் 🌸
புகையிலையில்லா சமுதாய இயக்கம் & தமிழமுது புலனக்குழு

🗓️ Oct 23
தமிழ்ஞானப்பழம் យប់...!!!
கலியுகக்கடவுள் கந்தனை வணங்கும் சிறப்பு நிகழ்ச்சி
🗓️ Oct 25
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழமுது நிர்வாகக்குழு கலந்தாய்வு கூட்டம்
🗓️ Oct 29
பயணங்கள் முடிவதில்லை – 2
அனுபவ பகிர்வு நிகழ்ச்சி